மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும் இக்கவிதைகளெங்கும் ததும்புகின்றன. இந்த வாழ்க்கையில் அன்பைப் போல தண்டிக்கப்படுகிற, நிராகரிக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற உணர்ச்சி வேறேதும் இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் மனுஷ்ய புத்திரன் தனது கவிதைகளில் திரும்பத் திரும்ப சந்திக்கிறார்.
Be the first to rate this book.