தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா?
இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன?
மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்?
கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன்? அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன?
உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
- இப்படி ஐ.டி. துறையினர் எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் பிரச்னைகளையும் விரிவாக அலசுகிற இந்தப் புத்தகம், அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் சொல்கிறது. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐ.டி. வல்லுநர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்தப் புத்தகம் உத்தரவாதம்.
நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், இந்தியாவில் குறிப்பிடத்தக்க பாலியல் நிபுணர்களில் ஒருவர். சென்னையில் தான் இயக்குநிராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்னைகளை முழுமையாக ஆராய்ந்து, அவர்களுக்காகச் சிறப்பு கவுன்சலிங்கும் நடத்தி வருகிறார்.
Be the first to rate this book.