எளிமையான, சுருக்கமான வரலாற்று அறிமுகம்.
பைபிள் காலம் முதல் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இன்றைய காலம் வரை.
இஸ்ரேல் என்பது நாடு மட்டுமல்ல. அது ஒரு கருதுகோள். ஒரு கனவாகத் தொடங்கி, மெல்ல மெல்ல யதார்த்தமாக மாறிய ஓர் அதிசயம். ஆனால் கடலளவு ரத்தத்தைக் காவு கொடுத்த பிறகே இந்த அதிசயம் சாத்தியமானது. உலகம் முழுவதும் தூற்றப்பட்ட இனமாக, காணும் இடங்களிலெல்லாம் வேட்டையாடப்பட்ட இனமாக இருந்தது போதும், நமக்கென்று ஒரு நிலம் வேண்டும். நம்முடையது என்று அழைத்துக்கொள்ள ஒரு தேசம் வேண்டும். நம் குழந்தைகளும் அவர்களுடைய குழந்தைகளும் அச்சமின்றி, சுதந்தரமாக வாழ்வதற்கான தாய்நிலம் வேண்டும். அதை நாமே உருவாக்கிக்கொள்வோம் எனும் முழக்கத்தோடு யூதர்கள் உத்வேகம் கொண்டு உருவாக்கிய நிலம் இஸ்ரேல்.
இஸ்ரேல் சாத்தியமானது எப்படி? இஸ்ரேல், யூதர்களின் தாய் பூமியா? பாலஸ்தீனர்களுடன் அவர்களுக்கு என்ன பகை? ஏதுமற்ற நிலத்தில் ஏகப்பட்ட செல்வத்தை அவர்கள் எப்படி உருவாக்கினார்கள்? அங்கே எப்படிப்பட்ட சமூக அமைப்பு நிலவுகிறது? உலகே வியக்கும் அறிவியல், தொழில்நுட்பச் சாதனைகளை அம்மக்கள் எப்படி நிகழ்த்தினார்கள்? மாபெரும் ராணுவத்தையும் மொசாட் எனும் வலிமைமிக்க உளவுத்துறையையும் எப்படிக் கட்டமைத்தார்கள்? இன்றைய தேதிவரை போரின் நிழலிலேயே அந்நாடு வாழ்வது ஏன்? ரமேஷ் பாபுவின் இந்நூல் இஸ்ரேல் குறித்த நேர்த்தியான, சுருக்கமான ஓர் அறிமுகத்தை வழங்குகிறது.
Be the first to rate this book.