இஸ்லாத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. வன்முறை, மனித உரிமை, குற்றம், தண்டனை, குடும்பக் கட்டுப்பாடு எனப் பல்வேறுபட்ட பல பிரச்சினைகளை இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. இஸ்லாம் குறித்து சமுதாயத்திற்குள் நிலவும் தவறான கருத்தாக்கங்கள் மற்றும் ஒற்றைப் புரிதல்களை ஆய்வு செய்வதையே இந்நூலின் முக்கியக் குவியமாக ஆக்கியுள்ளார் அஸ்கர் அலி எஞ்சினியர். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் அல்லாதவரிடத்திலும் இஸ்லாம் குறித்த ஒரு மறுமதிப்பீட்டையும் மறுசிந்தனையையும் எஞ்சினியர் வலியுறுத்துகிறார். அரேபியாவின் சமூகவியல் மற்றும் வரலாற்றுச் சூழ்நிலைகளில் உருவாகி, நவீன உலகத்திற்குப் பொருந்தாமல் உள்ள நடைமுறைகளைப் புறக்கணித்து ஒதுக்கவும் வேண்டுகிறார். நவீன உலகில் மதத்தின் பங்கு ஒரு பன்முகச் சமூகத்தில் மதச் சிறுபான்மையினரின் அடையாளம் ஆகியவை குறித்த மிக முக்கியப் பங்களிப்பு இந்நூல்.
Be the first to rate this book.