ஆட்சியாளர்கள் சைவர்களாக மாறிப்போன நிலையில், மக்களோடு மக்களாக வாழ்ந்த சமணர்கள் குடும்பத்தோடு புலம்பெயர முடியாத சூழ்நிலையில், சிலர் நெற்றியில் பட்டைபோட்டுக்கொண்டு சைவர்களாகத் தங்களை மாற்றிக்கொண்டார்கள்.
அவர்களின் வகையறாவே தற்போது தென்தமிழகத்து இராமநாதபுர மாவட்டத்தில் வாழும் மஞ்சப் புதூர் செட்டிமார்கள். அது போல தற்போது இளையான்குடியில் சமண சிற்பம் வேறொரு பெயரில் கொண்டாடப்படுகிறது.
சமணர்கள் எல்லோருமே சைவர்களாக மாறாத நிலையில் தமிழகத்து ஆற்றோரங்களில் பரவலாக வாழ்ந்தவர்கள் ஏன் இஸ்லாமியர்களாக மாறியிருக்கக்கூடாது என்பதே நம்முன் உள்ள நீண்டநாள் கேள்வி.
அக்கால கட்டத்தில்தான் இஸ்லாம் இங்கே நடமாடத் தொடங்கியிருந்தது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அரபுக்குதிரைக்காரர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
சமணர்கள் இஸ்லாத்தைத் தழுவியதை எவரும் சரியாகப் பதிய வில்லை. ஆனால், அவர்கள் பரவலாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆயிரங்காலத்தில் அந்த உண்மைகள் அடுக்கடுக்காய் ஆழத்தில் ஆழ்ந்துவிட்டது.
இவற்றை ஏன் வெளிக்கொணரக்கூடாது எனும் ஆதங்கத்தில் எழுத்தாளர் தாழைமதியவன் ஐந்தாண்டுகள் உழைத்ததில் உருவானதே இந்நூல்.
Be the first to rate this book.