ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப் படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப் படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும்.
சமய நல்லிணக்கத்திற்கு இறைமறையாகிய திருக் குர்-ஆனும் அதன் வழிப்பட்ட இஸ்லாமிய மார்க்கமும் அதனை உலகில் நிலைநிறுத்திய பெருமானாரின் வாழ்வும் வாக்கும் உலகிற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்துள்ளன வெனலாம்.
இஸ்லாத்தின் ஒளியில், சமய நல்லிணக்கத்தை அண்ணலாரின் வாழ்க்கை வழியே வரலாற்றுப் பூர்வமாக ஆய்வது தான் இந்நூலின் நோக்கம்.
Be the first to rate this book.