உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாமிய மதம். பல நற்கருத்துக்களையும், உன்னதமான கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இஸ்லாம், கிறிஸ்துவத்திற்கு அடுத்த நிலையில் உலகளாவிய நிலையில் பரவியிருக்கும் மதம். இஸ்லாமின் தோற்றம், அதன் வளர்ச்சி, ஐரோப்பாவில் இஸ்லாம், இந்தியாவின் இஸ்லாம், முஸ்லிம் இந்தியரின் அவல நிலை, இஸ்லாமும் மதச்சார்பின்மையும் என்று பல தலைப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம், எதிர் பயங்கரவாதம், பொதுவாக இஸ்லாமியரின் சிந்தனைக்கு முஸ்லிம் இந்தியரின் சிந்தனைக்கு என்ற தலைப்புகளில் பல அருமையான கருத்துக்கள் முன் வைத்திருக்கிறார் ஆசிரியர். இந்திய கலாசாரம் இஸ்லாம் வருகைக்குப் பின் மகத்தான செழுமையும், வளமும் பெற்றது என்று கூறும் ஆசிரியரின் கருத்து காய்தல், உவத்தல் இல்லாத நடுநிலையாளர்கள் கவனத்திற்கு உரியது.
Be the first to rate this book.