இஸ்லாத்தின் பாதை மிக இலகுவானது; மென்மையானது. மனித இயல்பு ஒரே திசையில் இயங்குவதை அது ஊக்குவிக்கிறது; பிறிதொரு திசையில் செல்வதைக் கண்டிக்கிறது. அது நலிவுறும்போது வலுப்படுத்துகின்றது. ஆனால், அதைத் தகர்த்துவிடுவதில்லை; நாசப்படுத்திவிடுவதில்லை; ஏன், அதற்காக முயல்வதுமில்லை. அறிவாளிகளும் மேதைகளும் பொறுமையோடிருப்பதைப் போன்று, அதுவும் பொறுமையோடு நடந்துகொள்கிறது. நீண்ட கால இலட்சியத்தை அடைய தன்னம்பிக்கையோடு பாடுபடும் ஒருவனைப் போன்று அது நடந்துகொள்கிறது. ஒன்று, இரண்டு அல்லது மூன்று, பத்து, நூறு, ஆயிரம் முறைகள் முயல்வதைக் கொண்டு இந்நீண்ட கால இலட்சியம் நிறைவேறிவிடுவதில்லை. அது வேண்டுவதெல்லாம், அந்தப் பாதையில் முன்னேற்றத்தை நோக்கி முயல்வதைத்தான்.
-- நூலிலிருந்து...
Be the first to rate this book.