Islam Rediscovered (Discovering Islam from its original sources) என்னும் ஆங்கில நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். இஸ்லாத்தை உள்ளது உள்ளபடியே எடுத்துரைப்பதுதான் இதன் ஒற்றை நோக்கம். பிற்காலத் திரிபுகளையோ, விளக்கங்களையோ உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் இன்று நடந்துகொள்ளும் முயற்சிகளையோ அடிப்படையாகக் கொள்ளாமல் மூலச் சான்றுகளிலிருந்து இஸ்லாத்தை அறிந்து கொள்வதே சரியான முறையாகும். எனவே, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிப் பதிவுகளின் அடிப்படையில் இஸ்லாத்தைச் சுருக்கமாகவும், எளிய முறையிலும் முன்வைக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
Be the first to rate this book.