இந்நூலின் முதல் பாகத்தில் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களின் பெயர், பரம்பரை, பிறப்பு, இளமைப் பருவம், கல்வி, பயிற்சி, ஆசிரியர்கள், ஹதீஸ் ஆசிரியர்கள், கற்பித்தல், ஃபத்வாக்கள், அவரது வாழ்க்கையின் மற்றுமேனைய பகுதிகள், அரசவையோடு கொண்டிருந்த தொடர்புகள், மறைவு, பண்புநலன்கள், பழக்க வழக்கங்கள், செய்த விவாதங்கள், கொடுத்த ஃபத்வாக்கள், மதி நுட்பம், இயல்பான திறமைகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இரண்டாம் பாகத்தில் பாகத்தில் இமாம் அவர்கள் இறையியல் மற்றும் ஹதீஸ் துறைகளில் கடைப்பிடித்த நியதிகள், நெறிமுறைகள் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது. ஹதீஸ் துறையில் அவரது நிலை என்ன என்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபிக்ஹு துறை பற்றிய விரிவான பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது. ஃபிக்ஹு தொகுக்கப்பட்ட முழுமையான வரலாற்றோடு மற்றெல்லா ஃபிக்ஹு வழித்துறைகளைக் காட்டிலும் ஹனஃபி வழித்துறை மேம்பட்டு சிறந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இறுதியில் இமாம் அவர்களின் புகழ்பெற்ற மாணவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.