சமகால பொருளாதார முறைகள் மனித இனத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தக்க தீர்வுகள் காண்பதில் தோல்வியையே தழுவியுள்ளன. சோஷியலிச சித்தாந்தம் கண்டுகொண்டுள்ள தோல்வி துலாம்பரமாகத் தெரிகின்றது. முதலாளித்துவ சிந்தனைகள் விமோசனம் எதனையும் தரக்கூடுமெனத் தெரியவில்லை. மிகவும் சிறிய ஒரு தொகையினர் அளவிடற்கரிய உயர் வாழ்க்கைத் தரத்தையும் வசதிகளையும் கொண்டிருக்க, மிகப் பெரும்பான்மையினர் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டுக்கொள்ள இயலாதோராகவே உள்ளனர். வேலை வாய்ப்பின்மை, பண வீக்கம், செல்வச் செழிப்பின் மத்தியிலான வறுமை, முறையிழந்த செல்வப் பங்கீடு, மாசடைந்த சூழல் முதலான அனைத்தும் மானுடத்தின் நிகழ்காலத்தை அவஸ்தைக்குள்ளாக்கி வைத்துள்ளன. எதிர்காலமோ அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.
இஸ்லாமிய பொருளாதார முறைமையே மானுடருக்கான பொருளாதார விடிவை அளிக்கக்கூடிய வலுவானதொரு திட்டம் என வாதிடும் இந்த நூல், உலகின்கண் வாழும் அனைவருக்கும் சமத்துவமான, சுதந்திரமான, நீதியான ஒரு வாழ்வை அமைத்துக் கொடுப்பதில் இது ஆற்றக்கூடிய பங்கினைத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.