இன்றைய உலகில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மார்க்கம் உண்டு என்றால் அது இஸ்லாம்தான்!
இன்னும் சொல்லப்போனால் அது மிகவும் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் மார்க்கமும் கூட.
இப்படி இஸ்லாம் தப்பும் தவறுமாகப் பிரச்சாரம் செய்யப்படுவதை முஸ்லிம்கள் போதிய அளவில் எதிர்கொள்ளவில்லை என்பது உள்ளபடியே உள்ளத்தை உலுக்கும் ஓர் உண்மை.
முஸ்லிம்கள் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டு இந்தத் தவறான பிரச்சாரங்களைக் களைந்திட வேண்டும். அதுவும் இஸ்லாமிய எதிரிகளும் இந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகளும் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த முயற்சி முன்னெப்போதையும் விட முனைப்பாக முடுக்கிவிடப்பட வேண்டும்.
அந்த வகையில் இஸ்லாம் மீதுள்ள தவறான கருத்துகளைக் களையும் விதத்தில், தவறான பிரச்சாரங்களைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் அறிவு விளக்கங்களையும் ஆன்மீக விடயங்களையும் முஸ்லிம் உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் ஒருங்கே தருவதுதான் First Things First என்ற நூலின் தனிச் சிறப்பு.
உலகின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வாழும் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்தும் மேலை நாடுகளின் இரட்டை நிலை குறித்தும் இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாம் எவ்வாறெல்லாம் தீர்வாக அமைகின்றது என்பது குறித்தும் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் இன்றியமையாத தேவை குறித்தும் விளக்கும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.