தற்காலத்தில் கல்வி, கலை, இலக்கியம், சட்டம், அரசியல் என அனைத்து மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாக பெண்ணியவாதம் உள்ளது. நவீன பொதுப்புத்தியிலும் அது பலத்த செல்வாக்கு செலுத்திவருகிறது.
மரபார்ந்த திருமணத்தையும் குடும்ப அமைப்பையும் சமூகத்தையும் அது வலுவிழக்கச் செய்திருக்கிறது. இதன் எதிரொலியாக சமூகத்தில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் மேலெழுந்துள்ளன.
பெண்ணியத்துக்கு எதிராகப் பேசுவது பெண் உரிமைகளுக்கு எதிராகப் பேசுவதாகச் சித்தரிக்கப்படும் இன்றைய சூழலில், இஸ்லாமியக் கண்ணோட்டத்திலிருந்து பெண்ணியத்தை விசாரணைக்கு உட்படுத்தும் துணிச்சலான முயற்சிதான் இந்த நூல்.
Be the first to rate this book.