இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது பாசறையில் வளர்ந்த மாமனிதர்களது வாழ்க்கையின் சில பக்கங்கள் உங்கள் முன் விரிகின்றன. இன்று நவீன பிர்அவ்னிய அராஜகங்களுக்கு முன்னால் வீரத்தோடு பல அரிய தியாகங்கள் புரிந்து, அவற்றுக்கு சவால் விடுக்கும் அம்மனிதர்களது அந்தப் பக்கங்களை உங்கள் எண்ணத் திரைகளில் ஓட விடுங்கள். அவை அவர்கள் புகழப்பட வேண்டும் என்பதற்காகவல்ல, நாம் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக.
இந்நூலில் இடம்பெறும் இஸ்லாமிய ஆளுமைகளோடு அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல் அகீல் அவரால் இரண்டறக் கலந்து வாழ்ந்து, தான் கண்டவற்றை வார்த்தைகளாக இங்கு வடித்துள்ளார். அவை கற்பனைகளுமல்ல, புனைக் கதைகளுமல்ல. மாற்றமாக நிஜ வாழ்வில் நடந்த நிகழ்வுகள், உண்மைச் சம்பவங்கள்.
Be the first to rate this book.