இஸ்லாமிய இயக்கம் என்றால் என்ன? அது ஏன் தேவைப்படுகிறது?
இது நன்கு அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். குறிப்பாக பல்லாண்டு காலமாக இயக்கத் தொடர்புடையவர்களுக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருப்பதும் அவர்களின் மனங்களில் எப்போதும் அது பசுமையாக இருப்பதும் அவசியமாகும்.
உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்வி எழலாம். அடிக்கடி பேசிய அடிக்கடி செவிமடுத்த ஒரு விஷயம் தானே இது! பிறகு ஏன் அதனை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்?
காரணம் இதுதான்: எந்த ஓர் இயக்கமாக இருந்தாலும் சரி, அதனுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்- இலக்கு எப்பொழுதும் பசுமையாக இருப்பது அவசியமாகும். அதனால்தான் திருக்குர்ஆன் சில விஷயங்களை அடிக்கடி எடுத்துரைப்பதைப் பார்க்கிறோம்.
Be the first to rate this book.