இஸ்லாமிய அழைப்புப் பணி எனும் இந்நூல் நான்கு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளது.
முதல் தலைப்பில் தூதுத்துவத்தின் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் இறைத்தூதர்கள் இவ்வுலகில் வருகை தந்ததற்கான காரணங்களும் அவர்கள் செய்த பெரும் சமூகப் புரட்சிகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதில், இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆற்றிய மாபெரும் செயல்பாடுகள் எத்தகு சீர்திருத்தங்களை ஏற்படுத்தின என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தலைப்பு நேரடியாக இஸ்லாமிய பரப்புரை தொடர்பான கருத்துக்களை விவாதிக்கிறது. அதில் முதலாவதாக அப்பணியின் சரியான அந்தஸ்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிறகு இஸ்லாத்தைப் பின்பற்றுவதைப் பற்றி வலுவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பிறகு பரப்புரையின் செயல்திட்டம் அதன் அடிப்படை ஒழுக்கங்கள் அதன் வெற்றி தோல்விகள் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியில் இறை மார்க்கம் ஏன் யாரால் நிராகரிக்கப்படுகிறது, அம்மார்க்கத்தைப் பெற்றுக் கொள்வோர் யார் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தலைப்பில் மனிதனை அந்த அழைப்புப் பணிக்கு ஏற்றவாறு தயார் செய்யக்கூடிய அம்சங்கள் பற்றியும் அப்பணியாற்றுவோரிடம் அவசியம் இருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
நான்காவது இறுதித் தலைப்பு அழைப்புப் பணி, அதனை நிர்வகிப்பது தொடர்பான தகவல்களைத் திரட்டித்தருகிறது. மேலும் இஸ்லாமிய கட்டமைப்பை வலுவாக்கக்கூடிய அம்சங்கள் பற்றியும் எவ்வகையில் அது மதிப்பானதாக அமையும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரீ இந்நூலில் நுட்பமான கல்வி, ஆய்வு அடிப்படையில் பேசவில்லை மாறாக கருத்துக்களை மிக எளிமையாகவும் எளிய நடையிலும் முன் வைக்க முயன்றுள்ளார்.
Be the first to rate this book.