ஓர் இறைத்தூதர், ஒரு வேதம், ஒரு சமுதாயம் இந்த மூன்றின் கூட்டுத் தாக்கத்தில் ஒரு புதிய உலகம் பிறந்ததை இஸ்லாமிய வரலாறு அல்ல, உலக வரலாறே ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்தப் புரட்சியை நபித்தோழர்களின் சமுதாயம் இறைத்தூதர் தலைமையில் சாத்தியப்படுத்தியது. அந்தத் தூதர் இறைவேதத்தின் வழிகாட்டலில் அதைச் சாத்தியப்படுத்தினார். இவ்வுலகத்தை மாற்றுவது எப்படி எனும் வினாவுக்கு முதலில் தங்களை மாற்றிக்கொண்ட செயல்வீரத்தின் முன்னுதாரண நாயகர்களாக விடை தருகிறார்கள் நபித்தோழர்கள். இங்கிருந்து தொடங்குகிறது அவர்களது உயர் அந்தஸ்தின் ஆதாரங்கள். சரியான கொள்கைப் பிடிப்பிலும் தடம் பிறழாத நபிவழிப் பாதையிலும் அவர்கள் சென்றதைப் போற்றிப் புகழ உலகம் முன்வருவதற்கு முன்பே இறைவேதங்களும் நபிமொழிகளும் முந்திச் சிறப்பித்துவிட்டன. தங்களை மெழுகுவர்த்தியாக உருக்கிக்கொண்ட அவர்கள் குளுமையான ஊற்றைப் பொங்கி வரச்செய்து அதன் மூலமே வெளிச்சத்தைப் பரப்பிவிட்டுள்ளார்கள். இதை ஷெய்க் ரபீஃ இப்னு ஹாதீ அல்மத்கலீ தமது விசாலக் கல்வியின் வாசலுக்குள் அழைத்து உபதேசிக்கிறார்கள்.
Be the first to rate this book.