இறைவன் ஒருவனே. உருவ வழிபாடு கூடாது. யாருக்கும் துரோகம் இழைக்கக்கூடாது. நாம் சம்பாதிப்பதன் ஒரு பகுதியை ஏழை, எளியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படி, இஸ்லாம் முன்வைக்கும் பல கருத்துகள் எளிமையானவை, மனிதவாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை.
இறைவனின் ஆணையை ஏற்று, இஸ்லாத்தின் கொள்கைகளை உலகெங்கும் பரப்பியவர் முஹம்மது நபி. அவர் ஓர் இறைத்தூதர் மட்டுமல்ல. மக்கள் தலைவர், அரசியல் வடிவமைப்பாளர், சீர்திருத்தவாதி.
ஆரம்பிக்கப்பட்டபோது, இஸ்லாத்தில் இணைந்தவர்கள் வெறும் நாற்பது பேர் மட்டுமே. பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து பல கோடிக்கணக்கான மக்களை இன்று சென்றடைந்திருக்கிறது இஸ்லாம்.
இஸ்லாத்தை ஒரு மதமாக மட்டும் அணுகாமல் வாழ்வியல் நெறியாக அணுகிப் புரிந்துகொள்ள இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.
Be the first to rate this book.