வாழ்க்கையில் இலட்சியம் என்பது படைத்தவனை வணங்கி வாழ்வதும் படைப்பினங்களுக்கு வழங்கி வாழ்வதும் ஆகும். இவை இரண்டும் இறைக்கட்டளைகளே! இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் இலட்சியமாகும்.
இந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. பெரும்பாலான செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன. எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந்துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும், புரியும்படியும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை எளிய முறையில், சுருக்கமாக, சிந்திக்கின்ற விதத்தில் நாடறிந்த நல்ல சிந்தனையாளர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.
Be the first to rate this book.