· இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு என்ன?
· இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட ஒரு மதமா?
· இஸ்லாம் பெண்களுக்கு எத்தகைய சுதந்தரத்தை அளிக்கிறது?
· மாற்று மதங்களை இஸ்லாம் எப்படி அணுகுகிறது?
இஸ்லாம் பற்றி நிலவும் பல தவறான கருத்தாக்கங்களைக் களைந்து அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் உண்மையான இஸ்லாத்தை எளிமையாகவும் சுவைபடவும் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
···‘இஸ்லாம் மார்க்கத்தின் கோட்பாடுகளையும், இறைத்தூதராக இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும், பிற மதத்தவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இஸ்லாமிய மதம் பற்றிய பல தகவல்களை வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் தந்திருக்கிறார் இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது. இஸ்லாமிய மதம் தொடர்புடைய சில விமர்சனங்களுக்கும் இத்தொடரில் அவர் பதில் அளித்திருக்கிறார்.’
- சோ
Be the first to rate this book.