இன்றைய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். இன்னும் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்துவதற்கு அற்புதமான வழிமுறையையும் காண்பித்திருக்கிறார்கள். இவற்றை அழைப்பாளர்கள் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் அழைப்பு மொழியில் தாக்கம் ஏற்படும் என்று நம்பலாம்.
டாக்டர் யூஸுப் அல்கர்ழாவி அவர்களின் அரபு நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் வடிவமாக ‘அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம்’ என்று தந்திருக்கிறார்கள். அதனை இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழ் மக்களுக்கு இடையிலும் பரவலாக்க வேண்டும், அதன் மூலம் அழைப்பாளர்களின் மொழியில் மட்டுமல்ல, அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் விழிப்பு உணர்ச்சியும் எழுச்சியும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை ‘இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்’ எனும் தலைப்பில் வெளியிடுகின்றோம்.
Be the first to rate this book.