இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கைத் திட்டமாக நம்முன் அளிக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் குலாம் சர்வர், முஸ்லிம் கல்வி நிறுவனத்தின் (Muslim Educational Trust, London) இயக்குநராவார். இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள், கடமைகள், போதனைகள் ஆகியவற்றைத் தெளிவான விளக்கங்களுடன் சுருக்கமாக வழங்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் புகழ்பெற்ற நபிமார்கள் சிலரின் சுருக்கமான வரலாற்றைக் கொண்டதாகவும் இந்நூல் திகழ்கிறது.
மேலும், இந்நூல் இஸ்லாமிய வரலாற்றில் மங்கையர் திலகங்களாய் மின்னும் கதீஜா (ரலி), ஆயிஷா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் ஆற்றிய பங்கையும் ஆடை, உணவு, பருகுதல் போன்றவை தொடர்பான இஸ்லாமியக் கட்டளைகளையும் குறிப்பிடுகிறது. இஸ்லாமியச் சட்டம் (ஷரீஅத்), குடும்ப வாழ்க்கை, திருமணம், பெண்களின் நிலை, இஸ்லாமிய அரசியல், பொருளியல் அமைப்பு போன்ற இஸ்லாத்தின் எல்லாக் கூறுகளையும் ஒரே புத்தகத்தில் இணைப்பதற்கான முதல் முயற்சி இதுவாகவே இருக்கலாம். இஸ்லாமியப் பாடப் புத்தகமாக சிறப்பான மதிப்பைப்பெறும் இந்நூல் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஆர்வங்கொண்ட இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் மதிப்பு மிக்கதாகத் திகழும்.
Be the first to rate this book.