‘எல்லா மக்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் படைத்தவன் உயிர் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் எனும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன.’ என்பதாக ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை 1776 குறிப்பிடுகிறது.
வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை, சமய உரிமை, சமத்துவ உரிமை, கல்வி உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இப்படியாக பல்வேறுபட்ட உரிமைகள் இருந்தாலும் மனித உரிமைகள்,
* வாழ்வுரிமை
* அரசியல் உரிமை
* பொருளாதார உரிமை
* சமூக உரிமை
* கலாச்சார உரிமை
என ஐந்தில் அடங்கிவிடும். இப்படியான மானுட உரிமைகள் பற்றிப்பேசும் பெரும் நூல்களுக்கான ஒரு வழிகாட்டி நூலாக இந்த நூல் திகழ்கிறது.
Be the first to rate this book.