சமூக வாழ்விலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் முற்றிலும் விலகி நின்று இறைவனுடன் மனிதர்கள் கொண்டிருக்கும் ஆன்மீக உறவுகளின் மொத்த கூட்டுத் தொகைதான் மதம் என்று பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால், மதத்திற்கு கொடுக்கப்படும் இதுபோன்ற வரையறுக்கப்பட்ட குறுகிய விளக்கங்களை எல்லாம் இஸ்லாம் நிராகரிக்கின்றது.
இஸ்லாம் என்பது ஓர் இறைவன் மீது கொண்டிருக்கக்கூடிய தெய்வீக கொள்கையின் மீதான நம்பிக்கையுடன் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்குப்படுத்திடும் திட்டம் ஆகும். இஸ்லாம் என்பது தேங்கிக் கிடக்கும் தனி நபர் நம்பிக்கை சார்ந்தது அல்ல; மாறாக, இது துடிப்புடன் கூடிய இலக்கு மற்றும் புரட்சிகரமான சமூக இயக்கம் சார்ந்தது ஆகும்.
இந்த வகையில் முஸ்லிம்களின் பூமியின் மீது நீதி மற்றும் அமைதியை நிலை நிறுத்திடும் கூட்டுப் பொறுப்பினை முன்னெடுக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இந்நூல் இஸ்லாத்தின் கொள்கை, இலக்கு மற்றும் இஸ்லாமிய இயக்கம் போன்றவற்றை சமகாலத்தில் நிலவிடும் சர்வதேச போக்குகள் மற்றும் இந்திய சூழலின் பின்னணியில் சுருக்கமாக எடுத்துரைக்கின்றது.
Be the first to rate this book.