இஸ்லாம் பரவலாக, பெரும்பாலும் அதன் போர்க்குண வடிவங்கள் காரணமாக, செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் அல்லாத உலகில் இஸ்லாத்தின் இயல்பை புரிந்துகொண்டவர்கள் ஒருசிலரே.
மலிஸ் ருத்வெனின் இந்தச் சுருக்கமான அறிமுகம், இஸ்லாத்தில் ஷியாக்கள், சன்னிகள் மற்றும் வஹாபிகள் போன்ற இயக்கங்களுக்கு இடையே இதுபோன்ற பெரும் பிரிவினைகள் ஏன் இருக்கின்றன, இஸ்லாமிய வாழ்வில் ஷரியத்தின் (இஸ்லாமிய சட்டத்தின்) பிரதானமான முக்கியத்துவம் போன்ற பிரச்னைகளில் தேவையான உள்ளொளியைக் கொண்டிருக்கிறது. மேலும், மகத்தான ‘ஜிகாத்’ (புனிதப் போர்) ஏன் இப்போது தீமைக்கு எதிராகப் போராடுவதை விடுத்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது? இஸ்லாமிய சமூகங்களில் பெண்கள் நிறைவைக் காண்கிறார்களா? நவீன உலகை எதிர்கொள்ளும்போது இஸ்லாம் எந்த அளவுக்கு இசைந்து செல்ல வேண்டும்? போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது
Be the first to rate this book.