19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் முடிவில், மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே மதத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. அவர்களின் கருத்துப்படி, தெய்வீக வழிகாட்டுதலுக்கான தேவையிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இம்மத நீக்கத்தைச் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அறிவின் முக்கிய ஆதாரம் “இயந்திர பொருள்முதல்வாதம்” மட்டுமே ஆகும்.
இது டார்வின், மார்க்ஸ், ஃபிரைடு போன்றோரின் தத்துவங்களின் வெற்றியின் சகாப்தம். மனிதன் அஷ்ரஃப் உல் மக்லூகத் (படைப்புகளில் சிறந்தவன்) ஆக்கப் பட்டுள்ளான் என்பதையும், அவனது இருப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் மக்கள் மனங்களில் இல்லாமல் ஆக்குவதையே இம்மூவரும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், மௌலானா மௌதூதி இத்தகைய மேற்கத்திய தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாகத் தமது ஆய்வுகளின் வழியே அறைகூவல் விடுத்ததோடு, அவர்களின் கருத்துகளிலுள்ள ஆழமற்ற தன்மையையும் நிரூபித்துள்ளார்.
Be the first to rate this book.