இஸ்லாமை இன்று “சர்வதேசப் பயங்கரவாதமாக” அமெரிக்கா முன்னிறுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியரை எதிரியாகக் காட்டிவருகின்றன. சராசரி மனிதனிலிருந்து, “அறிவுஜீவிகள்” வரை இஸ்லாம் குறித்து, தவறான தப்பெண்ணங்களே நிலவிவருகின்றன. இஸ்லாமியர் குறித்தும், ஒரு பொய்யான பொதுப்புத்தி மக்களிடையே நிலவிவருகிறது. இஸ்லாம்- எதிர்ப்புச் சக்திகள் இந்தப் பொதுப்புத்தியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்லாமியர்கள் குறித்த தவறான எண்ணங்களைப் போக்குவது இன்று சனநாயக வாதிகளின் முக்கியக் கடமைகளில் ஒன்று.
இஸ்லாம் தோன்றியதின் சமூகப் பின்னணி, அதன் வரலாற்றுப் பங்களிப்பு ஆகியன குறித்து இந்நூல் வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துரைக்கிறது. இஸ்லாம் குறித்து இசுலாம்-அல்லாதவர்கள் மத்தியில் நிலவிவரும் தவறான கருத்துக்களை மாற்றாமல், அடிப்படையில் ஒரு சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியாது என இந்நூல் ஆசிரியர் உறுதியாகக் கருதுகிறார். அந்த வகையில் இந்துக்கள் மத்தியில் நிலவிவரும் தப்பெண்னங்களை நீக்க இந்நூல் பெருமளவு உதவும்.
Be the first to rate this book.