மானுடவியல், சூழலியல், தோற்றவியல் சார்ந்த நெடுங்கால ஆய்வுகளுக்குப் பின் டேனியல் குயின் எழுதிய நாவல்தான் ‘இஸ்மாயில்’.
தொன்மங்களை அணுக வேண்டிய புதிய முறைமையை இதில் கண்டடையலாம். மனிதகுலம் கட்டற்ற வளர்ச்சியை நோக்கிச் செலுத்தப்படுவதன் பின்னுள்ள உளவியலை பிரதியில் அடையாளங்காணும் தருணத்தில், புதிய காட்சிக்கான பார்வைக் கோணங்கள் திறக்கப்பட்டுவிடும்.
இஸ்மாயில், நம்மை தனது கதைக்குள் பொருத்திக்கொண்டு கானகத்துள் அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவன். இந்நாவலை வாசித்த பின்னர் உங்கள் செவிகளுள் ஓயாமல் முணுமுணுக்கும் கலாச்சாரத் தாயின் சத்தத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்க இயலாது!
Be the first to rate this book.