இசைத்தமிழ் என்று வருகின்ற போது தமிழிசையின் மும்மூர்த்திகளாக சொல்லப்பட்டிருக்கின்ற முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை. ஆகியோரை முன்னிருத்துவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
சிலப்பதிகாரத்தை இசைமொழியில் தமிழுலகிற்கு மறு அறிமுகம் செய்து, தமிழுக்கு என்று தனியாக இசை மரபு இருக்கிறது. என்கிற பேருண்மையை நமக்கு கண்டுணர்ந்து, அதை நிரூபித்தும் காட்டிய முதல் ஆய்வாளரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அந்த வரிசையில் வருவதே இல்லை. ஆகவே தான் இசைத்தமிழின் தாத்தாவாக நாம் ஆபிரகாம் பண்டிதரை முன்னிருத்த வேண்டியுள்ளது. இந்த நூலின் நோக்கமும் இது தான். ஆபிரகாம் பண்டிதர் குறித்து பேசுவதற்கு முன்பாக இசைத்தமிழ் வரலாற்றிற்குள் கொஞ்சம் பயணிப்பதும், அதன் வழியாக ஆபிரகாம் பண்டிதர் எனும் பெரும் இசைத்தமிழ் ஆய்வாளரின்
பிரம்மாண்ட சித்திரத்தை காண்பதும் தான் சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறோம்.
உலகத்தில் உள்ள எல்லா படைப்புகளும் உழைப்பின் மூலம் கிடைத்தது என்றால், இசை மட்டும் எப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சொத்தாக இருந்திருக்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆய்ச்சியர் குரவையில் ஆடும் எளிய பெண்களுக்கு இருந்த இசை ஞானம், சங்க இலக்கியத்தில் வாழும் எளிய மனிதர்களுக்கு இருந்த இசை ஞானம் இன்றைக்கு இருக்கும் தமிழ் சமூகத்திற்கு இல்லாமல் போனது ஏன் என்று நாம் யோசிக்க வேண்டாமா?
Be the first to rate this book.