திரைப்படப் பாடல்கள் நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சங்க காலத்திலிருந்து நீண்ட நெடிய இசை மரபும் மிகச்சிறந்த இசை ரசனையையும் திறமைகளையும் உடைய நம் மண்ணில் அதன் நீட்சியாக அமைந்துள்ளன திரைப்பாடல்கள். பல்லாயிரக்கணக்கான பாடல்களை ரசிக்கின்றோம். ஆயினும் அந்த திரைப்பாடல்களில் இருக்கும் இசை நுட்பங்களைப் பலர் அறிந்து கொள்வதில்லை. குறிப்பாக நமது செவ்வியல் இசையின் கூறுகளான ராகம் தாளம் போன்றவை எப்படியெல்லாம் திரைப்பாடல்களில் அமைந்திருக்கின்றன என்பதை அலசுகின்றன இந்த நூல் . எளிய இசை ரசிகனுக்கும் இசை பற்றிய நுணுக்கங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை அளித்துத் திரைப்பாடல்களை மேலும் ரசிக்க உதவ வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நாளிதழில் தொடராக வரும்போதே கவனத்தை வெகுவாக ஈர்த்தன இக்கட்டுரைகள்.
Be the first to rate this book.