இஸ்லாத்தில் இசை கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. அதை மறுதலிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய இசைஞானி, இசையால் வாழ்ந்தார். இசையாகவே வாழ்ந்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து, ‘சிஷ்தியா தரீக்கா’வைப் பரப்பினார். அவர்தான் இசைஞானி இனாயத் கான். இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி என அவர் போகாத, பேசாத, பாடாத, இசைக்காத நாடே இல்லை. சிஷ்தி ஆன்மிகப்பாதை இன்று உலகளவில் பரவி இருப்பதற்கு முக்கிய காரணம் இனாயத் கான்தான். இன்று அவரது மகன்கள் அவரது ஆன்மிகப் பணிகளை அந்நிய மண்ணில் தொடர்ந்துகொண்டுள்ளனர். இனாயத் கான் எத்தகையை இசைக் குடும்பத்தில் பிறந்தார்; அவருடைய தாத்தா, தந்தை என அனைவரும் எப்படி இசை மேதைகளாக இருந்தனர்; இனாயத் கானின் சாதனை என்ன என்பதையெல்லாம் நாகூர் ரூமி இந்த நூலில் நயம்பட விவரித்திருக்கிறார்.
Be the first to rate this book.