தொல்காப்பியர் காலத்தில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் மொழியின் பல்வேறு நிலைகள் 20 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில வெவ்வேறு சூழலில் சொற்பொழிவுகளாக நிகழ்த்தப்பட்டு, இங்கு கட்டுரைகளாக உருப்பெற்றவை. பல நூற்றாண்டுகள் முத்தமிழாக சீருடன் திகழ்ந்த தமிழ் மொழி கடந்த நூற்றாண்டில் ‘இயற்றமிழ்’ என்னும் ஒரு தமிழோடு சுருங்கத் தொடங்கியது. தொலைத்துவிட்ட இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்னும் சொல்லாடல்களை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக யான் செயல்பட்டு வருவதைத் தமிழுலகு நன்கு அறியும். என் படைப்புகளும் அதனை உறுதிப்படுத்தும். இன்றைய தமிழ்ச் சூழலில் முத்தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் மரபுகளின் தொன்மை, செழுமை, தனிச் சிறப்பியல்புகள் பற்றியெல்லாம் நம் இன்றைய, நாளைய இளம் தலைமுறையினர்க்கு நினைவுறுத்த வேண்டிய கடமை ஒரு தமிழாய்ந்த ஆசிரியன், மூத்த குடிமகன் (Senior Citizen) என்ற முறையில் எமக்கும் உள்ளது. இக் கடமையை நிறைவேற்று முகத்தான் இந்நூலைத் தமிழ் கூறு நல்லுலகிற்குக் காணிக்கையாக்குகின்றேன்.
- அரிமளம் சு. பத்மநாபன்
Be the first to rate this book.