இசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது.
மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் – ஒவ்வொன்றும் அதனதன் பிரத்யேக சிந்தனைப் போக்கில் வெளிப்படுகிறது. பீதோவனிலிருந்து ஸ்பைஸ் கேர்ள்ஸ், சீனாவின் சிதெர் இசை வரை வளமான எடுத்துக்காட்டுகளைக் கையாண்டு சித்திரிப்பதன் மூலம், அனைத்து இசை பற்றியும் சிந்திப்பதற்கான சட்டகத்தைத் தர முயலுகிறார் நிகோலஸ் குக்.
இசை உள்ளடக்கியிருக்கிற தனிநபர், சமூகம் மற்றும் கலாசார மதிப்புகளைப் பரிசீலிப்பதன் மூலம் இசை பற்றிய மரபார்ந்த கருத்தாக்கங்களின் குறைபாடுகளை இந்நூல் வெளிப்படுத்து
கிறது. மேலும், இசைப்பவர்கள் மற்றும் கேட்பவர்களுடைய பங்காற்றலுக்கு அழுத்தம் கொடுக்கிற அணுகுமுறையையும் இது முன்வைக்கிறது.
Be the first to rate this book.