பெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.
நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு “கருணாநிதி – எம்.ஜி.ஆர்” நட்பு. நண்பர்களாக இருக்கட்டும், எதிரிகளாக இருக்கட்டும் இருவரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் – கருணாநிதி இருவருக்கும் நாற்பது வருட பழக்கம். இருபத்தைந்து வருடம் நண்பர்களாகவும், பதினைந்து வருடங்கள் அரசியல் எதிர் தரப்பிலும் இருந்து செயல்பட்டவர்கள்.
அடுத்து வரும் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இந்தப் புத்தகம் அவசியாக இருக்கிறது.
Be the first to rate this book.