நம்மைச் சுற்றிலும் ரத்தமும் சதையுமாக எத்தனையோ மனிதர்கள், உடல் மறைக்கப்படும் அளவிற்கு அவர்களின் மன வக்கிரங்கள் மறைக்கப்படுவதில்லை. அதேபோல், விழித்திரையில் தென்படாத எத்தனையோ பணிகளை அன்றாடம் சிலர் தங்கள் வாழ்வியலாக கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்தான் ‘இருப்புப் பாதை மனிதர்கள்.’
எல்லாமே பயணம்தான்! ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பு தொடங்குமிடமாகவும் இறப்பு சேருமிடமாகவும் இருக்கிறது. உடலும் உயிரும் இரண்டு தண்டவாளங்கள் என்றால் காலமும் அகாலமும் பயணமாகவும், எதிர்ப் பயணமாகவும் துக்கமாடுவது. உடலை விட்டு உயிர் பிரிவதற்கும் உயிரை விட்டு உடல் பிரிவதற்கும் இடையே வகுக்கப்பட்ட விதிகள் சிரித்துக்கொண்டே பயம் காட்டுகின்றன.
தண்டவாளங்களில் சிதறுண்ட உடல்களை அள்ளலாம், உயிர்களை எப்படி பொறுக்குவது?
Be the first to rate this book.