கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலை தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான், பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு, ஓவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களால தொங்கிக் கொண்டிருக்கின்றன. எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்துகொண்டான்.இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன.
Be the first to rate this book.