இன்றைய சூழலில் தொழில் நகரங்களைச் சார்ந்துள்ள கிராமப் பகுதிகளில் சலனங்கள் நிகழ்த்தித் தொழில் துறைகளுக்கு கிராமப்புற மக்களை விரட்டுகிறது காலம். அவ்வகையில் ஓர் எளிய கிராமத்திலிருந்து புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கை இந்த நாவலில் உணர்வோட்டத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. கனவுகளுடனும் கற்பனைகளுடனும் நூற்பு ஆலைக்குச் சென்று அடிமை வாழ்க்கையை அனுபவித்த பெண் ஒருத்தியின் வாழ்க்கைதான் இந்த நாவல். புதிய பொருளாதாரக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் கேள்விக்கு உள்ளாக்கும் எதார்த்தமான வாழ்க்கையை சி.ஆர்.ரவீந்திரன் இந்நாவலில் அழகாகப் பதிவு செய்துள்ளார்.
Be the first to rate this book.