'இரும்புக் குதிகால்' ஆசிரியர், லெனினுக்கு மிகவும் பிடித்தமானவர்.
ஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசை பகுதிகளில் வளர்ந்தார். அவர் ஒரு செய்தி தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றினார். உணவு பொருட்களை தகர டப்பாக்களில் அடுக்கும் வேலை செய்தார். ஒரு மாலுமியாக, ஒரு மீனபிடி தொழிலாளியாக வேலை செய்தார். ஒரு சணல் ஆலையில் வேலை செய்தார். ஒரு சலவை தொழிலாளியாக வேலை செய்தார். கிழக்கு கடற்கரையில் ரயில்பாதை கம்பெணியின் நாடோடி தொழிலாளியானார். நியூ யார்க் தெருக்களில் ஒரு போலீஸ்காரரால் தடியடிபட்டான். நாடோடியாக சுற்றி திரிந்ததற்காக நயாகாரா நீர்வீழ்ச்சியில் கைதுசெய்யப்பட்டார். சிறையில் மக்கள், அடித்து சித்ரவதை செய்யப்படுவதை கண்டார். சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் சிப்பிகளை கொள்ளையடிப்பவராக வேலைசெய்தார். ஃப்ளாபெர்ட, டால்ஸ்டாய், மெல்வில்லி ஆகியோர் படைப்புகளை வாசித்தார். கம்யுனிஸ்ட் மானிஃபெஸ்டோவை வாசித்து, 1896 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் அலாஸ்கன் தங்க முகாம்களில் சோஷலிசம் பற்றி போதிக்க துவங்கினார். பேரிங் கடல் வழியாக 2000 மைல் கப்பலில் திரும்பி வந்தார். அவர் சாகச புத்தக எழுத்தாளராக உலகில் பிரபலமானார். 1906 ஆம் ஆண்டு அவர் 'இரும்புக் குதிகால்' (தி ஐயன் ஹீல்) புதினத்தை எழுதினார். அந்த புதினத்தில் ஃபாசிஸ அமெரிக்காவை பற்றி எச்சரித்தார். அந்த புதினம் சோஷலிச கருத்தியலின் மனித சகோரத்துவத்தை விளக்கியது. அதன் கதாபாத்திரங்களின் விவாத போக்கில், அவர் சமூக அமைப்பை குற்றவாளியாக்குகிறார்.
இரும்புக் குதிகால்... 'தாய்' நாவலுக்கு சமகாலத்து படைப்பு மட்டுமல்ல, 'தாய்' நாவலுக்கு இணையானதும் கூட. இப்போதுதான் முதன்முறையாக தமிழுக்கு வருகிறது.
Be the first to rate this book.