பொதுவாக மகாபாரத தொலைக்காட்சித்தொடர்களிலும் காலட்சேபங்களிலும் கெட்டவர்களாகவே திருதராஷ்டிரரும் காந்தாரியும் காட்டப்படுகிறார்கள். அப்படியென்றால் தவசீலரான விதுரரும் பீஷ்மரும் ஏன் கடைசிவரை அவருடன் இருந்தனர் என்னும் கேள்விக்கு அவற்றில் விடை இருக்காது. உண்மையில் மகாபாரதத்தில் அவர்கள் இருவரும் மகத்தான மனிதர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வரலாற்றின் அலைகளும் மானுட அடிப்படையான பாசத்தின் விசைகளும் அவர்களை அடித்துச்சென்றன.
இந்நாவல் திருதராஷ்டிரனின் கதை. அவர் காந்தாரியை மணந்ததும் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்களும் அவர்களுக்கிடையே இருந்த உணர்வுபூர்வமான உறவும் பீஷ்மரும் விதுரரும் திருதராஷ்டிரரிடம் கொண்ட அணுக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன. இது மழைப்பாடல் நாவலில் இருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.
Be the first to rate this book.