இழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பணயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப் போல் இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய்பவை. அதே சமயம் இருளிலிருந்து மீட்புக்காகப் போராடுபவை. துயரத்தின் தடங்களைப் பின் தொடர்ந்து செல்லும் மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் 2016ல் எழுதப்பட்டவை. சென்னையை டிசம்பரில் தாக்கிய புயல் ஏற்படுத்திய கொடுங்கனவுகள் குறித்து எழுதப்பட்ட தொடர்கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.