11 கட்டுரைகளில் பல நூறு தோழர்களின் தியாகம் எழுந்து நிற்கிறது. சின்னியம்பாளையம் தோழர்களின் வீர மரணம் குறித்த கட்டுரை ஒரு காவியம்போல நம் நெஞ்சில் நிலைத்திருக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. வேலூர்ச்சிறையின் உட்சிறைப் பகுதியை ஒரு மார்க்சியப்பள்ளியாகவும் பாசறையாகவும் மாற்றிக்காட்டிய தோழர்களின் வீரமும் விவேகமும் வீச்சும் இன்றைக்கும் நமக்கு உத்வேகமூட்டக்கூடிய வரலாறாக நம் முன் விரிகிறது. சிறைச்சீர்திருத்தங்கள் என்பவை கம்யூனிஸ்ட் தோழர்களின் அளப்பரிய தியாகத்தினால் விளைந்தவைதான் என்பதை இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்கு எடுத்துரைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.
Be the first to rate this book.