சரியாக இணைத்திட முடிந்திடாத, ஒரு புதிரின் நிறைய உதிரித் துண்டுகள் போலத் தனித்தனியே அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குள் நுட்பமாகப் பரவியிருந்த சில ஞாபகங்களும், சந்தோசங்களும், வலிகளும் பூரணத்துவத்தின் ரகசியத் தன்மையில் மறைமுகமாக அவர்களின் நுண்வேர்களைச் சேர்த்துக் கொண்டிருந்தன. காலத்தின் நிரந்தரமான அமைதிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு தனிமையிலிருந்து இந்த உலகத்தை அவர்கள் விரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
Be the first to rate this book.