நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களால் தான் லஞ்சமும், ஊழலும் நாடெங்கும் நிறைஞ்சிருக்குது.
இதைத் தடுப்பது என் லட்சியம் என்று, சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தில் முதல் நாளே உறுதி கூறும், செல்வின் கலெக்டராக, நேர்மைக்குப் பரிசாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு மாவட்டமாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் யதார்த்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
செல்வினை மணந்து கொள்ள விரும்பும் தொழில் அதிபரின் மகள் அமலி, அவரை மணந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மாமனாரையே சட்டப்படி கைது செய்ய குடும்பப் பிரச்னை உருவாகிறது, பல திருப்பங்கள்.
இறுதியில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியப் பிரதிநிதியாக, செல்வினை அரசு அனுப்புவதாகக் கதை முடிகிறது. சினிமா பாணியில், நடப்பு அரசியலை நையாண்டி செய்து, சில நேர்மையான கலெக்டர்கள் படும் சோதனைகளையும் புதினமாக வடித்துள்ளார் நுாலாசிரியர். படிப்பதற்கு விறுவிறுப்புள்ள நுாலிது.
– பின்னலுாரான்
Be the first to rate this book.