மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும் கதை இரவுச் சுடர். ஏ.கே. ராமானுஜத்துடன் ஒருமுறை சூடாமணியின் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவளுடைய கதைகளில் அவருக்கு மிகப் பிடித்தது எது என்று கேட்டபோது அவர் இரவுச் சுடர் நாவலைத்தான் குறிப்பிட்டார். அவருக்கே உரிய கவிதை தோய்ந்த நடையில் இரவில் ஒளிரும் சுடராக யாமினியைப் படைத்திருக்கிறார் சூடாமணி. மற்றவர்கள் பாதை மறந்துவிடும் கருமையான இரவும் யாமினிதான். அதில் ஒளியைச் சிந்தும் சுடரும் யாமினிதான். இருட்டும் வெளிச்சமும் இரண்டறக் கலந்த படைப்பு அவள்.
Be the first to rate this book.