என்னுடைய நாவல்களில் மிக அதிகமாக வாசிக்கப்பட்டவற்றில் ஒன்று, ’இரவு’. அது அளவில் சிறியதென்பது ஒரு காரணம். தொடக்கநிலை வாசகர்கள் அதைப் படிக்க முடியுமென்பது இன்னொரு காரணம். தொடக்கநிலை வாசகர்கள் முற்றிலும் புதிய ஒரு நிலப்பரப்பில், புதிய வாழ்க்கைச் சூழலில் அமைந்த நூல்களை எளிதில் உட்புகுந்து உணர்வதில்லை. அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த, அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம் புனைவில் இருக்கையிலேயே அவர்களால் அதனுடன் அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது. அத்தகைய ஒரு படைப்பு, ’இரவு’.
இந்த நாவல் முதல் வாசிப்பில் ஒரு பரபரப்பூட்டும் கதை என அறிந்தவர்கள் இன்னொரு முறை வாசிக்கையில் வேறு நுட்பங்களைக் கண்டடையக்கூடும். பழைய எதார்த்தவாத நாவல்களின் சலிப்பூட்டும் நிதானம் அற்றது இது. கனவும், கற்பனையின் பெருக்கும், நிகழ்வுகளின் தொடரும் எனத் தீவிரமான ஈடுபாட்டுடன் வாசிக்க உகந்தது. அதன் உச்சத்தில் பல்வேறு நிகழ்வுகளை அது புரட்டி புரட்டித் தேடுகிறது. ஒவ்வொரு கணத்திலும் மனித உள்ளத்தின் விசித்திரமான சாத்தியங்களைக் காட்டி வாசகனைப் புதிய தளங்களுக்கு நகர்த்துகிறது. இன்னும் சில காலம் இதன் விந்தைகள் இவ்வண்ணமே ஒளி மயங்காமல் இருக்குமென்றே நான் எண்ணுகிறேன்.
Be the first to rate this book.