பூமத்திய ரேகைக்கும், பூமியின் சூரியச் சுற்றுப் பாதைக்கும் இடையே உள்ள சாய்வான கோணமே, உண்மையில் பூமியில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாற்றத்திற்குக் காரணமாகும். தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், பூமியிலுள்ள தாவர உயிரின வாழ்வு முறையைப் பாதிக்கிறது. சந்திரனின் இடமாற்றம், பூமியின் கடல் நீர் மட்ட ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாவதன் மூலம், பூமியிலுள்ள தாவர உயிரின வாழ்வு முறையில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சூரிய சக்தி பூமிக்கு வரும் கோண மாறுதல்களாலும் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள மாறுதல்கள் உண்டாகின்றன. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே நிகழும் பரஸ்பர ஈர்ப்பு விசைகளும் இதற்கு ஒத்துழைக்கின்றன. கிரகங்களிலிருந்தும், விண்மீன்களிலிருந்தும் பூமியை வந்தடையும் சக்தி பலமற்று இருக்கிறபடியால், இவை தாவர உயிரின வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை. … இந்த ஆல்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்கள், மேப்கள் மற்றும் விவரணங்கள் உதவியால், வேறு எவருடைய உதவியுமின்றி, மாணவர்கள் தங்களுக்குள் சில குழுக்களாகப் பிரிந்து, வானத்தில் காணப்படும் முக்கியமான விண்மீன்களையும், விண்மீன் மண்டலங்களையும் வேறுபடுத்தித் தெரிந்து கொள்ளமுடியும். இதிலிருந்து கிடைக்கும் அளவிலா மகிழ்ச்சியை அனுபவித்து மட்டுமே உணர முடியும்.
Be the first to rate this book.