போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. ‘எட்ட நின்று குச்சியால் கிளறுவதே’ வாசிப்பு என நம்பிக்கொண்டிருப்பவர்களைக் கிலி கொள்ளச் செய்யும் இக்கவிதைகள், முன் முடிவுகள் இல்லாமல் அணுகுவோரை வாஞ்சையோடு வரவேற்கின்றன.
Be the first to rate this book.