1928ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர். முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை 'இரவு'.
இந்நூலின் பக்கங்களில் வரலாற்றின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் மனிதகுலத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது.
1986இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார் வீஸல்.
Be the first to rate this book.