நாம் அதிகம் அறிந்திராத சாஃப்ட்வேர் துறை குறித்து எழுதப்பட்டிருக்கும் நாவல். தினசரி அலுவலக அரசியல்கள், உடலியல் சார்ந்தபிரச்சனைகள், சமூக அழுத்தம், காமம், ஆண்-பெண் உறவுகள், கள்ள உறவுகள் எழும் விதம், அதன்பாதிப்புகள் அதனால் நிறுவனத்துக்குள் ஏற்படும் சலனங்கள் என சகலகோணத்திலும் உரைநடையை கவனமாககையாண்டிருக்கிறார் செல்லமுத்து குப்புசாமி.
கடந்த பத்தாண்டுகளில் ஆண் பெண் உறவுகளிலும் மனித உறவுகளிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பிரமாண்டமானது. காதலின் காமத்தின் அர்த்தங்கள் பெருமளவுக்கு மாறுதலைடைந்துவிட்டன. இந்த மாறுதலின் தடங்களில்தான் இந்த நாவல் பயணம் செய்கிறது. சமகாலத்தின் புதிய சமூக உறவுகளையும் மன உணர்வுகளையும் துணிச்சலாக பேசுகிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதப்படிருக்கும் இந்த நாவல் ஒரு பரந்துபட்ட வாசக ரசனைக்கானது.
மேலோட்டமாகப் பார்த்தால் காமத்தைக் கொண்டாடும் குஜாலான படைப்பினைப் போலத் தோன்றும் ‘இரவல் காதலி’ வாசிப்பின் சுகானுபவம் தரும் ஆக்கம். 'இரவல் காதலி' நாற்பத்தைந்து வயதுக்குள் மனதளவில் இருக்கிற அத்தனை பேராலும் அரவணைத்துக் கொண்டாடப்படுவாள் என்பது நிச்சயம்.
Be the first to rate this book.