கை நீட்ட தாவி வந்து ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளைப் போன்று கவிதைகளும் சிலரிடம் சட்டென ஒட்டிக்கொள்ளும். சட்டென நம்மிடமிருந்து இறங்கிப் போய்விடாதிருக்க அதனோடு புழங்க வேண்டும். இவர் புழங்கிக் கொண்டிருக்கிறார். இனி இவரைக் கவிதைகள் விடாது. தன்மை மாற்றம் செய்வதில் காதல் முதன்மையானது. தொகுப்பிலிருக்கும் காதல் கவிதைகளில் நீங்கள் கண்டடையலாம். அன்றாடங்களில் இவரைப் பாதித்த சம்பவங்களையும் கவிதையாக்கியுள்ளார். முதல் தொகுப்புக்கான போதாமை இருந்தபோதும், தொடர்ந்து செயல்பட்டுக் கவனம் கொள்ளும் கவிதைகளைத் தருவார் எனும் நம்பிக்கையைத் தருகிறது இத் தொகுப்பு.
-கவிஞர் ந. பெரியசாமி
ஓசூர்.
Be the first to rate this book.